Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
புதன், 17 மே 2023 (11:56 IST)
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் இது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முதலமைச்சர் முக ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்து உள்ள இந்த அரசு அவர்களை நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.
 
இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து கடந்த அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமை கோவில் பெருந்தொற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகியவற்றிற்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.
 
அந்த வகையில் தற்போது அகவிலைப்படி உயர்வு குறித்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து இந்த உயர்வினை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை விட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகம்: செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் மே 30 வரை கொட்டப்போகுது மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349 சதய விழாவில்- அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை!

பல்லாங்குழி சாலைகளால் பதறும் வாகன ஓட்டிகள்

யூட்யூபர் இர்ஃபான், உதயநிதியோட ப்ரெண்டு.. அதுனால கேஸ் இல்ல! என் மேல 5 கேஸ் இருக்கு! – அதிமுக ஜெயக்குமார் ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments