Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களிடம் பிச்சையெடுக்கும் அரசு: கொரோனா நிதி குறித்து தயாநிதி மாறன் கூறிய பழைய வீடியோ வைரல்

Webdunia
புதன், 12 மே 2021 (08:58 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரனோ வைரஸ் அதிகமாக பரவி வரும் நிலையில் கொரோனா தடுப்பு நிதியாக அதிகம் தர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை அடுத்து நிதிகள் தமிழக அரசுக்கு குவிந்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் பாஜக பிரமுகர் ஒருவர் கடந்த ஆண்டு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இதேபோல் நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது தயாநிதி மாறன் கூறிய வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது
 
அந்த வீடியோவில் தயாநிதிமாறன் கூறிய போது ’அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளும் மக்களுக்கு பண உதவி செய்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் மாநில அரசும் மத்திய அரசும் நிதி கேட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களே இங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது பிச்சை எடுக்கும் மக்களிடம் பிச்சை பாத்திரம் ஏந்தி பிச்சை எடுக்கும் அரசு ஒரே அரசு இங்குதான் உள்ளது’ என்று தயாநிதி மாறன் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments