Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுகவுக்கு ஆதரவாக தினத்தந்தி: கருணாநிதி குற்றச்சாட்டு

அதிமுகவுக்கு ஆதரவாக தினத்தந்தி: கருணாநிதி குற்றச்சாட்டு

அதிமுகவுக்கு ஆதரவாக தினத்தந்தி: கருணாநிதி குற்றச்சாட்டு
, திங்கள், 2 மே 2016 (22:41 IST)
ஆதித்தனாரால் தொடங்கப்பட்ட “தினத்தந்தி” நாளிதழ் தேர்தல் நெருங்க நெருங்க, அதிமுக வின் பிரச்சார ஏடாக மாறி வருவதாக கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி தனது கேள்வி - பதில் பாணியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
ஆதித்தனாரால் தொடங்கப்பட்ட “தினத்தந்தி” நாளிதழ் தேர்தல் நெருங்க நெருங்க, அதிமுக வின் பிரச்சார ஏடாக மாறி வருகிறதே?
 
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் இது போன்ற ஏடுகளின் பிரச்சாரங்களையெல்லாம் கடந்து தான் தனது பயணத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இனியும் தொடரும். இந்தச் சலசலப்புகளுக்கெல்லாம் தி.மு.க. கவலைப்படாது.
 
"தினத்தந்தி”, “தினமணி” போன்ற ஏடுகளின் உரிமையாளர்கள் ஆளுங்கட்சியின் சார்பில் நேரில் கண்டு மிரட்டப்பட்டுள்ளார்களாம். “தினமலர்” நாளேட்டையும் அவ்வாறே மிரட்ட முயன்று அவர்கள் அதற்கு மிரளவில்லையாம்.
 
“தினத்தந்தி”யைப் பொறுத்தவரையில், “தினத்தந்தி அறக்கட்டளை” மீது அரசு தொடுத்திருந்த ஒரு வழக்கினைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக, அதிமுக அரசின் தலைமை வழக்கறிஞரே, நீதி மன்றத்தில் கடிதம் ஒன்றினை, சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த உதவிக்குக் கைமாறாக “தந்தி தொலைக்காட்சி” கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி, அதில் செயற்கையாக அதிமுக வுக்கு ஆதரவான நிலை இருப்பதாகக் காட்டி அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறதாம்.
 
அதைப் போலவே “தினமணி” நாளிதழில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாக்கி பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட “கார்ட்டூன்”களை மீண்டும் வெளியிடுவதாக உறுதி அளிக்கப்பட்டு அவ்வாறே வெளியிடத் தொடங்கியிருக்கிறதாம். எடுத்த வாந்தியை மீண்டும் வாயில் போட்டு விழுங்கிட முயற்சிக்கிறார்களாம் என குற்றம் சாட்டியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய தொலை நோக்கி?