Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினத்தந்தி கார்ட்டூன் சர்ச்சை ! வருத்தம் தெரிவித்த நிர்வாகம்!

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (15:02 IST)
தினத்தந்தியில் நேற்று வெளியான கொரோனா தொடர்பான கேலிச்சித்திரம் அறிஞர் அண்ணாவைக் கேலி செய்வதாக சொல்லப்பட்டதை அடுத்து அதற்கு தினத்தந்தி நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

கொரோனா விழிப்புணர்வு என்ற பெயரில் சிலை ஒன்றுக்கு கொரோனா கிருமி போன்ற வடிவத்தை முகமூடியாக மாட்டிவிட்டது போல ஒரு கேலிச் சித்திரத்தை தினத்தந்தி பத்திரிக்கை நேற்று வெளியிட்டு இருந்தது. அந்த சிலை சென்னை அண்ணாசாலையில் இருக்கும் அறிஞர் அண்ணாவின் சிலையைப் போல இருப்பதாக சொல்லப்பட்டது.

இதையடுத்து திமுகவினரும், திராவிட இயக்கத்தினரும் அது சம்மந்தமாக கண்டனங்களை தெரிவித்தனர். இது திமுக தலைமை வரைக்கும் செல்ல, அவர் தினத்தந்தி ஆசிரியருக்கு கடிதம் எழுதி அதைக் கண்டித்தார். மேலும் டிடிவி தினகரனும் இதற்கு கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து இன்று தினத்தந்தி நிர்வாகம் வருத்தம் கேட்டுள்ளது.

அதில் ‘தினத்தந்தியின் நேற்றைய இதழில் சிலைக்கு முகக்கவசம் அணிந்தது போல் கார்ட்டூன் வெளியிடப்பட்டிருந்தது. எந்த தலைவரையோ அரசியல் கட்சியையோ விமர்சிக்கும் நோக்கத்தில் இந்த கார்ட்டூன் பிரசுரிக்கப்படவில்லை. எனினும் இந்த கார்ட்டூன் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் தினத்தந்தி வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று கார்ட்டூன் வரைந்தவருக்குப் பதில் இன்று வேறு ஒருவர் கார்ட்டூன் வரைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments