Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலிண்டர் வெடிப்பு: மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்-அண்ணாமலை

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (16:59 IST)
கோவை உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே இன்று காலை காரில் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர்  உயிரிழந்தார். இதுகுறித்து, அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில், கார் வெடி விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது’ எனப்  பதிவிட்டுள்ளார்.
 

கோவை   நகரிலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இன்று காலையில்  அங்கிருந்த ஒரு மாருதி ஆல்ட்டோ கார் வெடித்து சிதறியது.

இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.  இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்த  நிலையில், வெடித்துச் சிதறிய காருக்குள் பால்ரஸ் குண்டுகள் மற்றும் ஆணிகள் அங்கு கிடந்ததை தடய அறிவியல் துறையில் கண்டுபிடித்துள்ளனர்.

‘’இந்தச் சம்பவம் குறித்து  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடி விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது.

பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .தமிழகத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடமிருந்து நம் மக்களைக் காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த வெடி விபத்தின் மர்மம் விலக போதிய நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாக எடுக்கும் என்று நம்புகிறோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments