உருவானது ’வாயு’ புயல்: தமிழகம், கேரளா, கர்நாடகத்திற்கு மழை!

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (11:50 IST)
அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயு புயலால் தமிழகம், கேரளா. கர்நாடக உள்மாநிலங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
அரபிக்கடலில் மும்பைக்கு தென்மேற்கில் 680 கிமி தொலைவில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இது மேலும் தீவிர புயலாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து குஜராத்தின் போரபந்தர் அருகே 135 கிமி வேகத்தில் நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 130 முதல் 140 கிமீ வேகத்தில் காற்றடிக்கும் என்றும், அப்போது கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதோடு இந்த புயல் காரணமாக கர்நாடகா, கேரளா மற்று தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறதாம். மேலும் 30 முதல் 40 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments