'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

Siva
வெள்ளி, 28 நவம்பர் 2025 (17:22 IST)
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'டிட்வா' புயலின் தாக்கம் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தனுஷ்கோடி பகுதியிலிருந்து மக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் காவல்துறையினரால் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தங்கச்சிமடம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
 
டிட்வா புயல் தற்போது புதுச்சேரியிலிருந்து சுமார் 410 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கில் 500 கி.மீ. தொலைவிலும் மெதுவாக நகர்கிறது. இது நவம்பர் 30ஆம் தேதி வட தமிழக கடலோரத்தை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
புயல் காரணமாக, தெற்கு ரயில்வேயின் ஓகா விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ராமேஸ்வரம் - எழும்பூர் சேது விரைவு ரயில் மண்டபத்திலிருந்தும், ராமேஸ்வரம் - திருச்சி ரயில் மானாமதுரையிலிருந்தும் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments