ஊரடங்கு நீட்டிப்பு...? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (18:15 IST)
கடந்த வருடம் சீனாவில் முதன் முதலில் கொரொனா தொற்று உருவாகி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியது.
 

இத்தொற்றின் முதல் அலை முடிந்த நிலையில்  தற்போது இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
.
விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்றுப் பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து அங்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதேபோல் நேற்று திருப்பூர் மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை பிற்பகல் 12-30 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.  #ஊரடங்கு_நீட்டிப்பு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments