வினாத்தாள் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! – கடலூரில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
புதன், 18 மே 2022 (08:50 IST)
கடலூரில் வினாத்தாள் பாதுகாப்பு அறையில் காவல் பணியிலிருந்த காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் வினாத்தாள்கள் லீக் ஆகி விடாமல் இருக்க மாவட்டம்தோறும் வினாத்தாள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அதற்கு ஆயுதமேந்திய போலீஸ் காவலும் அமைக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வீனஸ் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த தேர்வு வினாத்தாள்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர் காவலர் பெரியசாமி. காவல் பணியில் ஈடுபட்டிருந்த பெரியசாமி தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பெரியசாமி தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

சென்னை புறநகரில் இன்றிரவு முதல் மழை தீவிரமடையும்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments