Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்டர், கரெண்ட் சப்ளை கட்: சென்னையில் உள்ள 227 லேடீஸ் ஹாஸ்டல் மீது கிரிமினல் நடவடிக்கை!

Webdunia
புதன், 5 ஜூன் 2019 (13:12 IST)
சென்னையில் இயங்கி வரும் 277 பெண்கள் விடுதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்ககோரி ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
சென்னைக்கு படிப்பதற்காக அல்லது பணிக்காக வரும் பெண்கள் உறவினர்கள் இருந்தும் தனியார் விடுதிகளில் தங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடுகிறது. 
 
சொந்த ஊரைவிட்டு, பெற்றோர், நண்பர்களை விட்டு வெளியூருக்கு வரும் போது தங்கும் இடம் சவுகரியமாக இருந்தால் மட்டுமே நிம்மதியாக படிக்கவோ அல்லது வேலைக்கு செல்லவோ முடியும். 
ஆனால், சென்னையில் பல விடுதிகள் முறையான லைசன்ஸ் இல்லாமல் செயல்பட்டு வருகிறதாம். அந்த வகையில் சென்னையில் பதிவு செய்யாமல் இயங்கிவரும் 277 பெண்கள் விடுதிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. 
 
அப்படி பதிவு செய்யாமல் இயங்கி வரும் 277 பெண்கள் விடுதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்ககோரி சென்னை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
அதோடு, விடுதிகளில் தண்ணீர் மற்றும் மின்சார விநியோகத்தை நிறுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அந்த 277 விடுதிகள் எந்தெந்த பகுதியில் உள்ளன என்பது தெரிவிக்கப்படவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments