Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கால் ஏற்பட்ட நன்மை என்ன? சென்னை காவல் தகவல்!

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (16:51 IST)
ஊரடங்கு காலகட்டத்தில் சென்னையில் 79% குற்றங்கள் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.    
 
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.    
 
இருப்பினும், மக்கள் நோய் தொற்றின் வீரியத்தை புரிந்துக்கொள்ளாமல் வெளியே சுற்றி வருகின்றனர். அப்படி ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 2,18,533 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்படுள்ளனர். இதுவரை 1,85,896 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 2,05,054 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.98,07,394 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  
 
ஆனால், அதே சமயம் ஊரடங்கு காலகட்டத்தில் சென்னையில் 79% குற்றங்கள் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றங்கள் மட்டுமின்றி சாலை விபத்துக்களும் கணிசமாக குறைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொலைச்சம்பவங்கள் 44%, கொள்ளை நிகழ்வுகள் 75%, திருட்டு சம்பவங்கள் 81%, சாலைப் போக்குவரத்து இறப்பு நிகழ்வுகள் 75% குறைந்துள்ளன. சாலை போக்குவரத்து காய வழக்குகள் 81% குறைவு குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments