சினிமா ஆசையில் வரும் பெண்களை நூதன முறையில் ஏமாற்றிய் டிப்-டாப் ஆசாமி

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (07:46 IST)
சென்னை தி நகரில் உள்ள ஒரு இடத்தில் அலுவலகத்தை வைத்துள்ள ஆண்டனி என்பவர் தன்னை போட்டோகிராஃபர் என்றும், சினிமா ஆசையில் வரும் பெண்களுக்கு போட்டோக்கள் எடுத்து அவர்களுக்கு சினிமா சான்ஸ் வாங்கித் தருபவர் என்றும் விளம்பரப்படுத்தி உள்ளார்
 
இந்த விளம்பரத்தை நம்பி வந்த இளம்பெண்கள் பலரை போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோக்களை வைத்து அவர்களை மிரட்டி அவர்களிடமிருந்து பணம் பறித்துள்ளார். மேலும் தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களின் கிரெடிட் கார்டுகளை வாங்கி அதன் மூலம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்துள்ளார். இது குறித்து அந்த பெண்கள் முறையிட்டால் அவர்களை மிரட்டி உள்ளார்
 
இந்த நிலையில் துணிச்சலுடன் ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆண்டனி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில்  கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் தான் திநகரில் அலுவலகம் தொடங்கியதாகவும், அவருடைய டார்கெட் சினிமா ஆசையில் வரும் இளம் பெண்கள்தான் என்றும் தெரியவந்துள்ளது
 
நுனி நாக்கில் ஆங்கிலம், டிப்டாப் உடை மற்றும் சினிமா ஆசை ஆகியவை காரணமாக பல பெண்கள் அவரிடம் ஏமாந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகனை கொலை செய்த தாய்.. கள்ளக்காதலனும் உடந்தை..!

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல் கட்சி பிரமுகர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

ஒரு கோடிக்கும் அதிகமான அரசு வேலைகள்.. பிஹார் தேர்தலுக்காக NDA கூட்டணியின் முக்கிய வாக்குறுதிகள்!

தமிழக மக்களை குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது முதலமைச்சர் பதவிக்கே அவமானம்.. அண்ணாமலை

தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments