Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்ய பிரியா கொலை வழக்கு: நீதிபதியின் அதிரடி தீர்ப்பு

Siva
வெள்ளி, 27 டிசம்பர் 2024 (14:01 IST)
பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் மீது தள்ளிவிட்டு சத்யபிரியா என்ற மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சதீஷ் குற்றவாளி என அதிரடியாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யபிரியா என்ற கல்லூரி மாணவியை சதீஷ் தள்ளிவிட்டதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

சதீஷ், சத்ய பிரியா ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகவும், சதீஷின் நடவடிக்கை பிடிக்காததால் அவர் பிரிய சத்யா முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ், சத்யாவை ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அல்லி குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சதீஷ் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரங்களை டிசம்பர் 30ஆம் தேதி தெரிவிப்பதாக கூறியுள்ளார். இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'நான் அமைதியான பிரதமர் இல்லை, ஊடகங்களிடம் பேச பயந்தது இல்லை' - மன்மோகன் சிங் வாழ்க்கை எப்படி இருந்தது?

பீகாரில் மாறுகிறதா அரசியல் நிலவரம்? நிதிஷ்குமார் - லாலு பிரசாத் யாதவ் கூட்டணி?

கரும்பு டன்னுக்கு ரூ.950 குறைப்பு.. வயிற்றில் அடிப்பதுதான் திராவிட மாடலா? - பாமக ராமதாஸ் காட்டம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2: கணினி வழி தேர்வு ரத்து: ஓ.எம்.ஆர் முறையில் தேர்வு நடத்த திட்டம்..!

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை: தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments