Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எடுக்காத ஸ்கேனுக்கு பணம் வாங்கிய மருத்துவமனை - ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம்

எடுக்காத ஸ்கேனுக்கு பணம் வாங்கிய மருத்துவமனை - ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம்
, வியாழன், 1 டிசம்பர் 2016 (16:06 IST)
நோயாளியின் குடும்பத்தினரிடம் எடுக்காத ஸ்கேனுக்கு பணம்  வாங்கிய, சென்னை தனியார் மருத்துவமனைக்கு நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.


 

 
குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். 2014ம் ஆண்டு, அக்டோபர் மாதம், அவருடைய தாத்தா ஜெகநாதனுக்கு  உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, குரோம்பேட்டையில் உள்ளர் ஒரு தனியார் மருத்துவமனையில் ஜெகநாதன் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் அடுத்த நாளே உயிரிழந்தார்.
 
அவர் இறப்பதற்கு முன் அவருக்கு ஒரு ஸ்கேன் எடுக்க வேண்டும் எனவும், அதற்கு ரூ.3,120 கட்டணம் செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் கேட்டது. செந்தில்குமாரும் அந்த பணத்தை செலுத்திவிட்டார். ஆனால், அந்த ஸ்கேன் எடுப்பதற்கு முன்பே அவரின் தாத்தா இறந்துவிட்டார்.
 
எனவே, மருத்துவ சிகிச்சைக்கான மொத்த கட்டணத்தில், அந்த 3,120 ரூபாயை நீக்க சொல்லி செந்தில்குமார் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. 
 
இதையடுத்து 2015ம் ஆண்டு, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் செந்தில்குமார் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி, ஸ்கேன் எடுப்பதற்காக வாங்கிய ரூ.3,120, இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் வழக்குச் செலவு ரூ.5 ஆயிரம், மொத்தமாக ரூ.38,120 இந்த மாதத்திற்குள் செந்தில்குமாருக்கு மருத்துவமனை நிர்வாகம் அளிக்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் மாதம் 9 சதவிகித வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதற்கு பெயர்தான் கவுன்சிலிங்கா?. நியுசென்ஸ் - குஷ்புவை வாரிய நடிகை ரஞ்சனி