Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு;

Mahendran
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (16:05 IST)
கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் சொத்துக்கள், ஆக்கிரம்புகள் அகற்றப் பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் சொத்துக்கள், ஆக்கிரம்புகள் அகற்றப் பட வேண்டும் என்ற நீதிமன்ற  உத்தரவை பின்பற்றாமல்  பல ஆண்டுகளாக கோயில் நிலங்களை மீட்காமல் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
 
இன்றைய விசாரணையில் தமிழ்நாடு அரசின் வருவாய் துறை செயலாளர் ராஜாராமன் ஐ.ஏ.எஸ், உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அதிகாரிகளை வழக்கில் சேர்த்தது பற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது.
 
ஆக்கிரமிப்பை அகற்றும் அதிகாரம் உள்ள அதிகாரியின் பெயரை மட்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்க வேண்டும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் ஆக்கிரமிப்பு சார்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரும் போது பொறுப்புக்குரிய அதிகாரியின் பெயரை மட்டுமே வழக்கில் குறிப்பிட வேண்டும், தேவையின்றி  அனைத்து அரசுத்துறை செயலாளர்களையும் மனுவில் சேர்க்க கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
மேலும் அரசுத்துறை செயலாளர்கள் ஆக்கிரமிப்பு குறித்து பிறப்பிக்கும் ஆணையை பின்பற்ற வேண்டியது அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளின் கடமை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments