நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக, தங்கையா என்பவர் தொடர்ந்த வழக்கில் நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொதுச் செயலாளர் விஷால் ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட கலைஞர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் தங்கையா. இவரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து, அவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபற்றி விளக்கம் அளிக்க நாசர், விஷால் , தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு மற்றும் பெப்சி தலைவர் சிவா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.