Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எல்.ஏ திருமண வழக்கு; உண்மையை கூறிய பெண்! – முடிந்தது வழக்கு!

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (12:03 IST)
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவின் காதல் திருமண வழக்கில் இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் மணப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தன் காதலித்து வந்த கல்லூரி மாணவி சௌந்தர்யா என்பவரை சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த பெண் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திருமணத்திற்கு அவரது வீட்டார் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், அதனால் பிரபு சௌந்தர்யாவை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் 19 வயது கூட நிரம்பாத தன் மகளை எம்.எல்.ஏ கடத்தி சென்று விட்டதாக அதில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் சௌந்தர்யாவை நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று நீதிமன்றத்தில் ஆஜரான சௌந்தர்யா தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தான் விருப்பப்பட்டே பிரபுவை மணந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் சௌந்தர்யா மேஜர் என்பதால் அவரது விருப்பப்படி அவரை எம்.எல்.ஏ பிரபுவுடன் அனுப்பி வைத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்