திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ரத்து வழக்கு – நீதிமன்றம் உத்தரவு !

Webdunia
புதன், 15 மே 2019 (14:24 IST)
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி கே கே மகேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த பிரச்சாரத்துக்காக பிரதானக் கட்சிகள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கே கே மகேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்துள்ளார்.

அவரது மனுவில் ‘திருப்பரங்குன்றத்தில் இடைத் தேர்தலுக்காக வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது அதிகரித்துள்ளது. மேலும் பொதுக்கூட்டங்களுக்காக மக்களைப் பணம் மற்றும் உணவு ஆகியவற்றைக் கொடுத்து அழைத்து வருகின்றனர். திமுக, அதிமுக, அமமுக ஆகிய பிரதானக்ட கட்சிகள் வாக்காளர் ஒருவருக்கு ரூபாய் 1,000 வரை கொடுக்கப்படுகிறது. ஆனால் பொய்யான தேர்தல் செலவுக் கணக்கைக் காட்டி தேர்தல் ஆணையத்தை ஏமாற்றுகின்றன. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தலை நடத்தினால் அது நியாயமாக இருக்காது. அதனால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.’ எனக் கூறியிருக்கிறார்.

இந்த மனுவை இன்று ஏற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தேவைப்படும் பட்சத்தில் மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அனுகலாம் எனவும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments