Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவர்கள் ஆபாச வலைத்தளம் நடத்திய கணவன் மனைவி கைது

சிறுவர்கள் ஆபாச வலைத்தளம் நடத்திய கணவன் மனைவி கைது

Webdunia
புதன், 27 ஜூலை 2016 (11:27 IST)
சென்னையில் ஆபாச கட்டண வலைத்தளம் நடத்தியதாக ஒரு தம்பதியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 


சென்னையில் வசித்துவரும் ஒரு தம்பதியர் குழந்தைகளின் பாலியல் உறவு தொடர்பான காட்சிகளை வெளியிடும் கட்டண வலைத்தளத்தை நடத்தி வருவதாக சைபர் கிரைம் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அந்த வலைத்தளத்தில் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்பவர்களின் ஐ.பி. நம்பர் மற்றும் இமெயில் ஐ.டி.க்களை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து, சென்னை அருகேயுள்ள சோழிங்கநல்லூரில் வீட்டில் இருந்தபடி ஒரு தம்பதியர் இரண்டு வலைத்தளங்களில் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்வது காவல்துறையினரின் சோதனையில் தெரியவந்தது.

இந்த வலைத்தளங்களை பார்வையிட வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து 2 கோடியே 40 லட்சம் ரூபாயை கட்டணமாக வசூலித்துள்ளதாகவும், மேற்படி தொகை பெங்களூரில் உள்ள ஒரு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதையும் விசாரணையில் கூறியுள்ளனர். இதையடுத்து, இந்த ஆபாச வலைத்தளங்களை நடத்திவந்த சித்தாத்தா வேலு மற்றும் அவரது மனைவி பிரிசில்லா மார்கிரெட் தன்ராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பாஜக கூட்டணியும் புறக்கணிப்பு..!

சிந்து நதியில் தங்கம் புதைந்து கிடக்கின்றதா? தோண்டி எடுக்க குவியும் மக்களால் பரபரப்பு..!

இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்கள்: சீமான்

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது: போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

கனடா பிரதமர் பதவி.. பின்வாங்கினார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா!

அடுத்த கட்டுரையில்