Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிசர்வ் வங்கிக்கு வந்த பணத்திலேயே கள்ள நோட்டுகள்! வங்கிகளில் விசாரணை!

Prasanth Karthick
ஞாயிறு, 10 நவம்பர் 2024 (11:23 IST)

நாட்டில் கள்ள நோட்டுகளின் புழக்கம் பெரும் தலைவலியாக இருந்து வரும் நிலையில் மத்திய ரிசர்வ் வங்கிக்கு, தேசிய வங்கிகளிடம் இருந்து வந்த பணத்திலேயே கள்ளநோட்டு இருப்பது கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

புதுச்சேரியில் இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல தேசிய வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளில் இருந்து 6 மாதத்திற்கு ஒருமுறை ரூபாய் நோட்டுகள் சென்னை உள்ள மத்திய ரிசர்வ் வங்கியின் கிளைக்கு அனுப்பப்படுகின்றன.

 

அவ்வாறாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு வந்த ரூபாய் நோட்டுகளை பரிசோதனை செய்தபோது அதில் 500 ரூபாய் நோட்டிகளில் 55 நோட்டுகள் என மொத்தம் ரூ.27,500க்கு கள்ள நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முன்னதாக வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது அதில் சில கள்ள நோட்டுகள் இருப்பது கண்டறியப்படும் சம்பவம் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது வங்கியிலிருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட பணத்திலேயே கள்ளநோட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 12 முதல் கனமழை சூடு பிடிக்கும்.. சென்னை மக்கள் ஜாக்கிரதை: தமிழ்நாடு வெதர்மேன்..!

நீட் பயிற்சி மாணவியை 6 மாதமாக பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை..2 ஆசிரியர்கள் கைது!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! 7 நாட்களுக்கு கனமழை..!

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments