Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளச்சாராய விவகாரம்.! வி.சி.க. போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.!!

Senthil Velan
திங்கள், 24 ஜூன் 2024 (12:39 IST)
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் இன்று மாலை நடைபெற இருந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த சம்பவத்திற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. மேலும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
 
இதனிடையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக தி.மு.க. அரசை கண்டித்து அதிமுக, பாஜக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தை அறிவித்தன. ஆனால், இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மருத்துவர். இருப்பினும் தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. இன்று அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ALSO READ: சாதிவாரி கணக்கெடுப்பு.! சட்டப்பேரவையில் காரசார விவாதம்..!
 
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாதிவாரி கணக்கெடுப்பு.! சட்டப்பேரவையில் காரசார விவாதம்..!

அரசியல் சாசனத்தை கையில் ஏந்தியபடி சோனியா காந்தி ஆர்ப்பாட்டம்.. இந்தியா கூட்டணி அதிரடி..!

2047ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவு நிறைவேறும்.. மக்களவையின் முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி..!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தையில் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

சிறிய அளவில் ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments