Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று: மொத்தம் 7 பேர் பலி !

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (18:04 IST)
சீனாவில் இருந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா தொற்றுக்கு இந்தியாவில் 4 ஆயிரத்துக்கும் அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், சுமார் 336 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்துவருகின்றா தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், இன்று ஒரே நாளில்  தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது :

தமிழ்நாட்டில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. எனவே தமிழ்நாட்டில் மொத்தம் 690 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்படைந்துள்ளனர்.  
இதுவரை 19 பேர் கொரோனாவில் இருந்து மீட்கபட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு மேலும், இன்று பாதிக்கப்பட்ட 69 பேரில் 63 பேர் டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள்.

சென்னையில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா உறுதியானதன் மூலம் எண்ணிக்கை 149ஆக அதிகரித்துள்ளது. 
 
சென்னையில் சிகிச்சைபெற்று வந்த 64 வயது பெண் இன்று உயிரிழந்துள்ளார். எல்லோரையும் பரிசோதனை செய்வது இயலாத காரியம் எனவேதான் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், வீட்டில் இருக்கவும் வலியுறுத்துகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதவாத சக்திகளுடன் அதிமுக?! திமுகவில் இணைந்த மற்றொரு அதிமுக பிரபலம்!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

அடுத்த கட்டுரையில்
Show comments