Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பு : தமிழகத்திற்கு ரூ. 987 கோடி ஒதுக்கீடு !

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (13:27 IST)
கொரோனா பாதிப்பு : தமிழகத்திற்கு ரூ. 987 கோடி ஒதுக்கீடு !

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 350 ஐ நெருங்குகிறது. இதில் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக இருந்த நிலையில் இப்போது மேலும் இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக தமிழகத்திற்கு ரூ. 987 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ‘இதில் முதல் நபர் கலிபோர்னியாவிலிருந்து வந்த 64 வயது பெண்மணி ஆவார். தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொருவர் துபாயிலிருந்து திரும்பிய 43 வயது நபர் ஆவார். இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இரண்டு பேரின் உடல்நிலையும் சீராக இருக்கிறது’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா  வைரஸ் பரவல் பாதிக்கப்பட்டுள்ள நகர்ப்புற மற்றும் கிராமம்புற மக்களுக்கு அடிப்படை சேவைகள் வழங்குகின்ற உள்ளாட்சி அமைப்புகள், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர பகுதிகளுக்கு ரூ. 1629 கோடியும், ஊரகப் பகுதிகளுக்கு ரூ.940 கோடியும், ஒதுக்கப்பட்டுள்ளது.  இதுதவிர மாநிலங்கள் வாரியாகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்திற்கு ரூ.987.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

முன்பெல்லாம் தங்கம், வெள்ளி விலையை தினசரி கேட்போம்.. இப்போது கொலை எண்ணிக்கையை கேட்கிறோ: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments