Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் வந்த கொரோனா தடுப்பூசி; பற்றாக்குறையை சமாளிக்க தீவிரம்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:17 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் இன்று கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் முதல்கட்ட டோஸ் செலுத்த கூட தடுப்பூசிகள் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கூடுதல் தடுப்பூசி வழங்க மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த வார இறுதியில் தடுப்பூசிகள் தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் புனேவிலிருந்து விமானம் மூலமாக 3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகம் இன்று வந்து சேர்ந்தது. சென்னை விமான நிலையம் வந்தடைந்த இந்த தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பாதிப்பு நிலவரம் சார்ந்து பகிர்ந்தளிக்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை செண்ட்ரல், கடற்கரை உட்பட 19 மின்சார ரயில்கள் ரத்து! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கொளுத்தும் வெயிலில் குளிர்விக்க வரும் மழை! இன்று 20 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ நோய்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தாய்லாந்து செல்கிறார் பிரதமர் மோடி.. பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பு..!

வக்பு வாரிய சட்ட திருத்தம் நிறைவேற்றம்.. ஆதரவு, எதிர்ப்பு ஓட்டுக்கள் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments