இன்று உதயநிதி ஸ்டாலினிடம் நிதியளித்தவர்களின் விபரங்கள்!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (21:35 IST)
கொரோனாவுக்கு எதிரான ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசுக்கு தினந்தோறும் நிதிகள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று தன்னிடம் நிதி அளித்தவர்கள் குறித்த விபரங்களை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது
 
திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சகோதரர் மு.ஜெயக்குமார் அவர்கள் கல்வி மற்றும் மருத்துவ சேவை பணிகளுக்காக கழக இளைஞரணியின் அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்
 
கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை புழல் ஒன்றிய இளைஞரணி சார்பாக ஒன்றிய அமைப்பாளர் இனியன், துணை அமைப்பாளர்கள் யுவராஜ் & டேவிட் ஆகியோர் இன்று என்னிடம் வழங்கினர். அவர்களுக்கு அன்பும், நன்றியும்.
 
சேலம் மாவட்டம், ஆத்தூர் நரசிங்கபுரத்தை சேர்ந்த மீனா தியாகராஜன் அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.25 ஆயிரத்திற்கான ரொக்கத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும் நன்றியும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் முதல் சாலைவலம்! தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு..!

விஜய் தலைமையில் மெகா கூட்டணி!.. தவெக போறதே இதுக்குதான்!.. செங்கோட்டையன் போடும் ஸ்கெட்ச்!...

சேலம் இல்லனா பாண்டிச்சேரி!.. விஜய் போட்ட பக்கா ஸ்கெட்ச்!.. செம ரோட் ஷோ இருக்காம்!..

போலி ஆவணங்கள் மூலம் எச்-1பி விசா? சென்னை அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி தகவல்..!

சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments