Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரனோ வார்டில் இருந்து வெளியேற மாட்டோம்: திடீரென போர்க்கொடி தூக்கும் குணமான நோயாளிகள்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (14:57 IST)
கொரனோ வார்டில் இருந்து வெளியேற மாட்டோம்
கொரனோ வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் எப்பொழுது மருத்துவமனையில் இருந்து வெளியேறி வீட்டுக்குப் போவோம் என்று தான் இருப்பார்கள். ஆனால் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த கொரனோ நோயாளிகள் குணமடைந்தும் கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து வெளியேற முடியாது என அடம் பிடிப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
தஞ்சையில் உள்ள சிறப்பு கொரோனா வார்டில் நோயாளிகளுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காலையில் எழுந்ததும் அவர்கள் குளிப்பதற்கு சுடு தண்ணீர், காலையில் இட்லி பொங்கல் வடை காப்பி மற்றும் 11 மணிக்கு பிஸ்கட் மற்றும் காபி, மதியம் சிக்கன் பிரியாணி முட்டையுடன், மாலை மீண்டும் பிஸ்கட் மற்றும் காபி அதன் பின்னர் இரவு இட்லி இடியாப்பம் அதன் பின்னர் தூங்கச் செல்லும் முன் இரண்டு வாழைப்பழங்கள் என வழங்கப்படுகிறது
 
அதுமட்டுமின்றி பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக கேரம்போர்டு, செஸ் ஆகிய விளையாட்டுகள் விளையாடும் வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் தொலைக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வீட்டில் உள்ள வசதியை விட அதிக வசதி இருப்பதால் கொரோனா நோயாளிகள் குணம் ஆகியும் அந்த சிறப்பு வார்டில் இருந்து செல்ல மறுத்ததாக தெரிகிறது இதனையடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் 50 நோயாளிகள் குணமான பின்னும் அதே வார்டில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்கள் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களும் சோகத்தோடு வீடு திரும்பியதாக தெரிகிறது
 
நோயாளிகள் குணமான பின்னரும் வீடுகளுக்கு செல்லாமல் அடம் பிடிப்பதை பார்த்து அங்கு உள்ளவர்கள் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்துள்ளனர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்.. எதிர்க்கட்சிகளின் ரியாக்சன் என்ன?

இன்று காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை? வானிலை எச்சரிக்கை..!

அதானி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: நீதிமன்றம் உத்தரவு..!

அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து! மறு தேர்வு தேதி அறிவிப்பு வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி..!

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு: ஜனவரி 1 முதல் அமல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments