Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலியாக 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்ச்சி!

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (15:57 IST)
கொரோனா எதிரொலியாக 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வு நடத்தாமல் நேரடி தேர்ச்சி வழங்குவது பற்றி பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை என தகவல் வெளியானது. இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
உலகம் முழுவதும் பெரும் சீனா முதற்கொண்டு பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரொன வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இதுவரை 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. தமிழகத்தில் இதுவரை  3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
நாடு முழுவதும்  பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் வரும் மார்ச் 31 வரை தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
 
யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் மார்ச் 31 ஆம் தேதிவரை ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில், தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. மேலும், வரும் 27 ஆம் தேதி தொடங்கவிருந்த பத்தாம் வகுப்பு தேர்வுகளும், தற்போது நடைபெற்று வரும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளையும் ஒத்திவைக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநீக்கம் செய்யப்பட்ட மேற்குவங்க ஆசிரியர்கள் பணியை தொடரலாம்: சுப்ரீம் கோர்ட்

மியான்மர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்.. அச்சத்தில் அலறி ஓடிய பொதுமக்கள்..!

விஜய்க்கு எதிராக சமயக்கட்டளை அறிவித்த இஸ்லாமிய அமைப்பு: என்ன காரணம்?

கருணாநிதி கல்லறையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரமா? நயினார் நாகேந்திரன் கண்டிப்பு..!

ஓஹோ.. அதான் விஷயமா? வருங்கால முதல்வர் நயினார் நாகேந்திரன்!? - பாஜகவினர் போஸ்டரால் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments