எகிறும் பாதிப்பு: சென்னைக்கு கோரமுகம் காட்டும் கொரோனா!

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (12:17 IST)
சென்னை ராயபுரத்தில் 3,388 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
 
நேற்று தமிழகத்தில் 1,384 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது.
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,384 பேர்களில் சென்னையில் 1,072 பேர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,693ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 3,388 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கத்தில் 2,123, தண்டையார்பேட்டையில் 2,261, தேனாம்பேட்டையில் 2,136, அண்ணா நகரில் 1,660, அடையாறில் 1,042, வளசரவாக்கத்தில் 975 ஆக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

விஜய்க்கு சிபிஐ சம்மன்!.. போனாலும் பிரச்சனை... போகலானாலும் பிரச்சனை.. தளபதி சமாளிப்பாரா?!...

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்.. ஆளுநர் ரவியிடம் எடப்பாடி பழனிச்சாமி புகார்..!

சிறு வயதில் நிறைவேறாத காதல்: 60 வயதில் கரம் பிடித்த முதியவர்.. ஆச்சரிய தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments