Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறு மாதம் கழித்து விலை குறைந்த சிலிண்டர்! மக்கள் நிம்மதி பெருமூச்சு!

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (09:51 IST)
கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து விலையேறி வந்த மானியமில்லா சிலிண்டர் விலை இந்த மாதம் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மானியமில்லா சிலிண்டர் விலை 590 ரூபாயாக இருந்தது. ஆனால் மாதாமாதம் சிலிண்டரின் விலை அதிகரித்துக் கொண்டே சென்றதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். கடந்த மாதம் 147 ரூபாய் விலை அதிகரித்த சிலிண்டர் 881 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

சிலிண்டரின் கடும் விலையேற்றத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இந்த மாதம் சிலிண்டரின் விலையில் 55 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் மானியமில்லா சிலிண்டரின் விலை 826 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நேற்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளதாக சமையல் எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments