Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவி விலகுக... கிருஷ்ணகிரி ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (14:37 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரே ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவி விலக வலியுறுத்தி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

 
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி வகித்து வரும் நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிக்கலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என சிலர் அவ்வபோது கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
கட்சிக்கு இரட்டை தலைமை தேவையா என்ற கேள்வி கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தேனி அதிமுக கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டபோது பலரும் சசிக்கலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர். அதை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டியும் சசிக்கலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரே ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவி விலக வலியுறுத்தி அமமுக-வை சேர்ந்த காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் என்பவர் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
 
மேலும் சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று ராணுவ கட்டுப்பாட்டுடன் கட்சியை வழி நடத்த வேண்டும் என போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் கிருஷ்ணகிரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு.! வெள்ளை அறிக்கை வெளியிடுக.! அரசுக்கு ஜி.கே.மணி வலியுறுத்தல்..!

மலேசிய பிரதமரை சந்தித்த நடிகர் கமல்..! என்ன பேசினாங்க தெரியுமா..!!

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 5-பேர் நீரில் மூழ்கி பலி..! பயிற்சியின் போது நிகழ்ந்த பரிதாபம்..!

இந்தியாவில் 80% கணித ஆசிரியர்களுக்கு அடிப்படைகூட தெரியவில்லை..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி! உக்ரைன் போர் குறித்து புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments