அதிமுகவில் சர்ச்சை.! ராகுலை புகழ்ந்த பதிவை நீக்கிய செல்லூர் ராஜு.!

Senthil Velan
புதன், 22 மே 2024 (13:44 IST)
ராகுல் காந்தியை புகழ்ந்து தனது எக்ஸ் தளத்தில் போட்ட பதிவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நீக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி ஒரு ஓட்டலில் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு, `நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி' என்றும் குறிப்பிட்டிருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல், அதிமுக வட்டாரத்திலும் தற்போது பேசப்படும் பொருளாக மாறியது.

செல்லூர் ராஜுவின் இதுபோன்ற நடவடிக்கையால், அதிமுகவில் இருந்து விலகி காங்கிரசில் சேருவாரா என்ற பரபரப்பும் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. தேர்தல் நேரத்தில் அதிமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

ALSO READ: தமிழர்களின் நலனை அண்டை மாநிலங்களிடம் அடகு வைத்த திமுக.! எஸ்.பி வேலுமணி கண்டனம்..!!

இந்த நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்து போடப்பட்ட பதிவை தற்போது நீக்கி உள்ளார். ராகுல் காந்தியை புகழ்ந்து கூறிய தனது பதிவு அதிமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியதால் பதிவை நீக்கியாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments