Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்கள் பற்றி சர்ச்சை பேச்சு..! மத்திய அமைச்சர் சோபா மீது வழக்குப்பதிவு.!!

Senthil Velan
புதன், 20 மார்ச் 2024 (14:37 IST)
தமிழர்கள் பற்றி அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் மத்திய அமைச்சர் சோபா மீது மதுரை காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அவரது இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். இதை அடுத்து தனது பேச்சுக்கு அமைச்சர் ஷோபா மன்னிப்பு கோரியிருந்தார்.
 
இந்நிலையில் தமிழர்களைப் பற்றி அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தியாகராஜன் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மத்திய அமைச்சர் சோபா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ: அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமின்.! தமிழகத்தை விட்டு வெளியேறக்கூடாது..! உச்ச நீதிமன்றம்...

இரு தரப்பினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் அமைச்சர் ஷோபா பேசியதாக வழக்குப் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை கண்டித்து.. தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை!

இந்தியாவை தூக்கி நிறுத்திய மன்மோகன் சிங்கின் முக்கிய திட்டங்கள்!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. மீண்டும் 200 ரூபாய் உயர்வு..!

நீண்ட இடைவெளிக்கு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு..!

மன்மோகன் சிங் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments