Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

Siva
திங்கள், 5 மே 2025 (19:40 IST)
தமிழகத்தில் நமது ராணுவம் மற்றும் தேசப் பாதுகாப்பு குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது ஆளும் அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் போராட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
 
காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் 28 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் மதத்தின் பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் நமது ராணுவம் மற்றும் தேசப் பாதுகாப்பு குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது ஆளும் அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும், சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியுள்ள வங்கதேசக் குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை திமுக அரசு உடனே துரிதப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று மாலை சென்னையில் தமிழக பாஜக  சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. 
 
காஷ்மீரில் நடந்த மனிதத் தன்மையற்ற அந்தக் கொடூரத் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, மக்கள் நலனையும், நமது தேசத்தின் பாதுகாப்பையும் முன்னிறுத்தும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு, பயங்கரவாதத்திற்கு எதிரான நமது வலுவான கண்டனங்களைப் பதிவு செய்தோம்.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

இந்தியாவுக்கு முழு ஆதரவு.. டெல்லி வரவும் புதின் ஒப்புதல்.. பாகிஸ்தான் அதிர்ச்சி..!

இந்தியாவுக்குள் ஊடுருவிய 22 பாகிஸ்தான் பெண்கள்.. 95 குழந்தைகள் பிறப்பு. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 500

அடுத்த கட்டுரையில்
Show comments