வசந்தகுமாரை அடுத்து மேலும் ஒரு காங்கிரஸ் எம்பிக்கு கொரோனா!

Webdunia
ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (18:16 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரி தொகுதி எம்பியும் தொழிலதிபருமான வசந்தகுமார் அவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு அதன் பின் அவர் கொரோனாவில் இருந்த மீண்டாலும் வேறு நோய்களால் காலமானார் என்பது தெரிந்ததே 
 
வசந்தகுமாரின் இழப்பையே காங்கிரஸ் கட்சி இன்னும் ஜீரணிக்காமல் இருந்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு காங்கிரஸ் எம்பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளருமான டாக்டர் செல்லக்குமார் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக டாக்டர் செல்லக்குமார் அவர்களுக்கு சளி மற்றும் லேசான காய்ச்சல் இருந்ததாகவும் இதனை அடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட எம்பிக்கள். எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு எம்பிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் எங்க வீட்டுப்பிள்ளை.. கோத்துவிடாதீங்க!... பிரேமலதா விளக்கம்!..

18 மாதங்களாக பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 2 கப்பல் தள ஊழியர்கள் கைது.. அதிர்ச்சி தகவல்..!

ஒரே ஒரு வீட்டை தவிர எனது வருமானம் முழுவதையும் கட்சிக்கு தருவேன்: பிரசாந்த் கிஷோர்

நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம்: பிரேமலதா விஜயகாந்த்..!

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments