Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்பது? ஆலோசனை குழு அமைத்த காங்கிரஸ்..!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (15:40 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் திமுகவுடன் எத்தனை தொகுதிகள் கேட்டு பெறுவது என்பது குறித்த ஆலோசனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.  

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து மூத்த தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆலோசனை செய்ய உள்ளனர்.

 டிசம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் டெல்லியில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தொகுதி பங்கீடு, போட்டியிட வரும் தொகுதிகள், அரசியல் நிலவரம் உள்ளிட்டவை ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் கேஎஸ் அழகிரி, செல்வ பெருந்தகை, ப சிதம்பரம், மாணிக்கம் தாகூர் மற்றும் செல்லகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் டிசம்பர் 29ஆம் தேதி டெல்லி சென்று ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments