Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்று கோட்சே இன்று பேரறிவாளன்... காங்கிரஸ் எம்.பி சர்ச்சை பதிவு!

Webdunia
புதன், 18 மே 2022 (16:36 IST)
காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் பேரறிவாளன் விடுதலை குறித்து சர்ச்சைக் கருத்தை பதிவிட்டுள்ளார். 

 
30 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னர் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காரணமாக விடுதலையானார். இந்த நிலையில் அவரது விடுதலையை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்ற போதிலும் காங்கிரஸ் கட்சி மட்டும் தனது அதிருப்தியை தெரிவித்து வருகிறது. 
 
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறியபோது பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகத்தில் நாளை காங்கிரசார் போராட்டம் நடத்தும் என்றும் வெள்ளை துணியால் கட்டிக்கொண்டு நாளை காலை 10 மணி முதல் 11 மணி வரை போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் பேரறிவாளன் விடுதலை குறித்து சர்ச்சைக் கருத்தை பதிவிட்டுள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள். அவர்கள் நிரபராதிகள் அல்ல. உச்ச நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர் இன்று விடுதலை, அன்று கோபால் கோட்சே இன்று பேரறிவாளன் என பதிவிடுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments