Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக சகவாசம் பெரும் நாசம்னு புரிஞ்சிப்பீங்க! – ஜோதிமணி எம்.பி கண்டனம்!!

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (14:02 IST)
தமிழக அரசின் உத்தரவை மீறி பாஜக வேல் யாத்திரை நடத்துவது குறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக அனுமதி அளிக்க மறுத்தது தமிழக அரசு. இந்நிலையில் திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னையிலிருந்து காரில் திருத்தணி கிளம்பி சென்ற பாஜக தமிழக தலைவர் எல்.முருகனுக்கு திருத்தணி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி “அடிமை அதிமுக பிஜேபிக்கு பயந்து வேல் யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து தமிழக மக்களுக்கு பிஜேபி இழைக்கும் துரோகங்களுக்குத் துணைநிற்கிறது. ஒன்றுமேயில்லாத பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகள் அழிந்ததுதான் வரலாறு. உதாரனம் AGP,JDS, SAD,PDP. அதிமுகவும் அப்பட்டியலில் சேரும்” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக அரசின் வேல் யாத்திரை குறித்து பேசியுள்ள தமிழக முதல்வர் “சட்டம் தன் கடமையை செய்யும்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments