Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 தொகுதிகள் பெற்றும் அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ்.. இதுதான் காரணம்..!

Siva
திங்கள், 18 மார்ச் 2024 (07:39 IST)
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஏழு அல்லது எட்டு தொகுதிகள் தான் அதிகபட்சமாக கொடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென தமிழகத்தில் ஒன்பது தொகுதியும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என 10 தொகுதிகள் கொடுத்தது காங்கிரஸ் கட்சியின் பல பிரமுகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது பத்து தொகுதிகள் பெற்றும் சில காங்கிரஸ் பிரமுகர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக திமுக வைக்கும் நிபந்தனைகளில் ஒன்று கரூர், கிருஷ்ணகிரி, ஆரணி ஆகிய மூன்று தொகுதிகளில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்கள் போட்டியிட கூடாது என்றும் அவ்வாறு வேட்பாளரை மாற்ற முடியாத சூழல் ஏற்பட்டால் அந்த தொகுதியை திமுகவுக்கு கொடுத்து விடுங்கள் என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது

இதனால் கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடலாம் என்று ஆசையில் இருந்த ஜோதிமணி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் திருநாவுக்கரசு போட்டியிட்ட திருச்சி தொகுதியை மதிமுகவுக்கு தாரை பார்க்க திமுக முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து அவரை சமாதானப்படுத்திய காங்கிரஸ், தேனி தொகுதியில்; போட்டியிடுங்கள் என்று கூறிய போது தேனியில் டிடிவி தினகரன் போட்டியிடுவார், அவர் எதிர்த்து போட்டியிடு வெற்றி பெறுவது கஷ்டம் என்று தனது தெரிவித்து வருகிறாராம்.

பத்து தொகுதிகள் கிடைத்தும் முக்கிய தொகுதிகள் கிடைக்காது என்ற காரணத்தினால் காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

ALSO READ: ஜாபர் சாதிக்கை தீவிர விசாரணை.. மலேசிய பிரமுகரால் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சியா?


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments