Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணியா? காய் நகர்த்தும் தம்பிதுரை..!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (17:36 IST)
நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு உதயநிதி பேசிய சனாதனம் குறித்த கருத்து என்று காங்கிரஸ் நினைக்கிறது. அதேபோல் திமுக எம்பி செந்தில்குமார் பேசிய சர்ச்சைக்குரிய கருத்தும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே திமுகவுடன் கூட்டணி அமைத்தால் அகில இந்திய அளவில் காங்கிரஸுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசனை கூறும் சில நிபுணர்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க  ஆலோசனை கூறி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை தம்பித்துரை ரகசியமாக சந்தித்து கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணிக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments