Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கூட்டணியில் இணைகிறதா காங்கிரஸ்? 20 தொகுதிகள் தர ஈபிஎஸ் தயாரா?

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (16:35 IST)
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக  விலக்கபட்டதும் ஒரு சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே தமிமுன் அன்சாரி அதிமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ள நிலையில் எஸ்டிபிஐ கட்சியும் அதிமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை ஒன்பது தொகுதிகள் மட்டுமே திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட நிலையில் 20 தொகுதிகள் தர எடப்பாடி பழனிச்சாமி தயாராக இருப்பதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாஜக என்ற ஒரே ஒரு கட்சி விலகியதன் காரணமாக  திமுக கூட்டணி சிதறு தேங்காய் போல் உடைந்து வருவதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி புத்திசாலித்தனமாக  சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் அது மட்டும் இன்றி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை இணைக்க ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகியது திமுகவுக்கு பெரும் சரிவாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷா,அதானி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி: உத்தவ் தாக்கரே கட்சி குற்றச்சாட்டு

ஜார்கண்ட் மாநிலத்தில் திடீர் திருப்பம்.. ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி..!

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது பாஜக புகார்

காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த உத்தவ் தாக்கரே படுதோல்வி.. எடுபடாத ராகுல் பிரச்சாரம்..!

ஒரே வாரத்தில் 3000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments