Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி விசாரிக்க ராகுல் காந்தி சென்னை வருகை!

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி விசாரிக்க ராகுல் காந்தி சென்னை வருகை!

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி விசாரிக்க ராகுல் காந்தி சென்னை வருகை!
, வெள்ளி, 7 அக்டோபர் 2016 (11:21 IST)
உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்னும் சற்று நேரத்தில் சென்னை வர உள்ளார்.


 
 
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி விசாரிக்க சிறப்பு விமானம் மூலம் 11.15 மணிக்கு சென்னை வருகிறார் ராகுல் காந்தி. இன்னும் சற்று நேரத்தில் அப்பல்லோ மருத்துவமனைக்கு வரும் அவர் முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரிப்பார்.
 
ராகுல் காந்தி வர இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பிரதமருக்கு இணையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் 11.45 மணி அளவில் அப்பல்லோவிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் மத்தியில் உள்ள முக்கிய தலைவர்கள் யாரும் அவரை வந்து பார்க்கவில்லை. இந்நிலையில் ராகுல் காந்தி இன்று வர இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போயஸ் கார்டனின் வாரிசு: ஜெயலலிதாவும், தீபாவும்!