Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி -முதல்வர் அறிவிப்பு

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (14:13 IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
 

இதுகுறித்த் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று (23-8-2023) இரவு நடந்த சாலைவிபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஆரைகுளம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் திரு.சங்கர் (வயது 33) என்பவர். சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று திருநெல்வேலி திரும்பும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். இளம் வயதில் உயிரிழந்த தொலைகாட்சி ஒளிப்பதிவாளர் திரு.சங்கர் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது இரங்கலையும், ஆழ்ந்த ஆறுதலையும் அவரது தெரிவித்துக்கொள்வதோடு, ரூபாயும், குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

சட்டமன்றத்தில் நீட் தீர்மானம் கொண்டு வருவதால் என்ன பயன்.? அரசியல் நாடகம் என இபிஎஸ் விமர்சனம்..!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் வாக்குறுதி என்ன ஆச்சு? தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி

நீட் விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments