Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - நாகர்கோவில் ரூ.4,400 கட்டணம்.. ஆம்னி பேருந்துகள் குறித்து குவியும் புகார்கள்..!

Mahendran
புதன், 23 அக்டோபர் 2024 (10:15 IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை அடிப்பதாக புகார் கூறப்பட்ட நிலையில், ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 
 
தீபாவளியை பொருத்தவரை சொந்த ஊருக்கு செல்ல ஒரு மாதத்திற்கு முன் திட்டமிட்டாலும் கூட, விரைவு பேருந்துகளில் இருக்க கிடைப்பதில்லை. இதனால், கடைசி நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் தான் அதிக கட்டணம் வைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 
சாதாரண நாட்களில் சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்ல ₹1200 முதல் ₹1500 வரை வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ₹4400 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஆனால், இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறியபோது, ஆம்னி பேருந்துகள் ஒப்பந்த வாகனங்கள் என்பதால், கட்டணம் எங்களுக்கு நிர்ணயம் செய்யப்படுவதில்லை என்றும், அதிகபட்ச கட்டணத்தை உரிமையாளர்கள் சார்பில் நிர்ணயிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுடன் இணையதளத்தில் பதிவு செய்துள்ளோம் என்றும், அதற்கு மேல் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
 
ஆம்னி பேருந்துகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கூடுதல் கட்டணம் குறித்து எச்சரிக்கை விடுத்து வருகிறோம் என்றும், பேருந்துகளில் அதிக கட்டணம் குறித்து புகார் செய்ய, 1800 425 6151, 044 2474 9002, 044 2628 0445, 044 2628 1611 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments