Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி புகார்

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (22:40 IST)
வேலாயுதம்பாளையம் காவல்நிலைய  ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் மீது  தக்க நடவடிக்கை எடுக்க கோரி, கரூர் மாவட்ட காவல்துறை துணைக்  கண்காணிப்பாளரிடம் இன்று காலை கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் திரு V.V.செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. 
 
கரூர் மாவட்டம். புகழூர் நகர பாரதிய ஜனதா கட்சி தலைவரும், புகழூர் நகர்மன்ற உறுப்பினருமான திரு.கோபிநாத் அவர்களை அராஜகமான முறையில் தாக்கியும், அவதூறாக பேசியும், தொடர்ந்து கட்சிப்பணி ஆற்ற முடியாத அளவிற்கு, அவர்களை முடக்கும் விதமாக பொய் வழக்குகளை போட்டு வருகின்ற, வேலாயுதம்பாளையம் காவல்நிலைய  ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் மீது மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி, கரூர் மாவட்ட காவல்துறை துணைக்  கண்காணிப்பாளரிடம் இன்று காலை கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் திரு V.V.செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. 
 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் கோபிநாத். மாவட்ட செயலாளர் சக்திவேல் முருகன்,  மாவட்டத் துணைத் தலைவர் செல்வம், புகளூர் நகர தலைவர் கோபிநாத், மாவட்ட இளைஞரணி தலைவர் தீன சேனன். மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் உமாதேவி, கரூர் மத்திய நகர தலைவர் கார்த்தி. தெற்கு மாநகரத் தலைவர் ரவி, மாவட்ட மகளிர் அணி தலைவி தனலட்சுமி, மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments