Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் செலவுக்கு கொடுத்த தொகையை ஹெச் ராஜா அமுக்கிவிட்டார்… பாஜக பிரமுகர் குற்றச்சாட்டு!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (13:14 IST)
பாஜகவைச் சேர்ந்த சந்திரன் என்பவர் காரைக்குடி சட்டமன்ற தேர்தல் செலவுக்கு கொடுத்த தொகையை ஹெச் ராஜா பதுக்கிவிட்டதாகக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

பாஜகவின் காரைக்குடி பெருநகர தலைவராக இருப்பவர் சந்திரன். இவர் காரைக்குடி தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டு அதற்காக வேலை செய்துள்ளார். ஆனால் ஹெச் ராஜா தோல்வி அடைந்த நிலையில் சந்திரன் மேல் ஹெச் ராஜா தரப்பு கோபமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஹெச் ராஜா சுயபரிசோதனை செய்துகொள்ளாமல் என் உழைப்பின் மேல் சந்தேகப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் அவரின் மருமகன் என்னை மிரட்டுகிறார். ஹெச் ராஜாவால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சுகிறேன் ‘ எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் ‘தேர்தல் செலவுக்காக கட்சி கொடுத்த தொகையை ஹெச் ராஜா செலவு செய்யவில்லை. அதை பதுக்கிவிட்டார். இப்போது அவர் 4 கோடி ரூபாயில் வீடு கட்டி வருகிறார்’ என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது பாஜகவுக்குள் உள் கட்சி பூசலை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

203 ஆசிரியர்கள் நியமனம்.. 202 பேர் போலி சான்றிதழில் வேலைக்கு சேர்ந்ததால் அதிர்ச்சி..!

அலுவலக மீட்டிங் முடிந்தவுடன் 7 மாடியில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

விஜய் கட்சியில் இணைகிறாரா ஓபிஎஸ்? மோடி வருகையின்போது ஏற்பட்ட அவமதிப்பால் அதிரடி..!

நான் போரை நிறுத்தாவிட்டால் இன்னும் இந்தியா - பாகிஸ்தான் மோதி கொண்டிருப்பார்கள்: டிரம்ப்

கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து.. பேச்சுவார்த்தையின் உடன்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments