Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் பத்திரிக்கையாளரை கன்னத்தில் தட்டிய விவகாரம்: ஆளுநர் மீது கமிஷ்னரிடம் புகார்

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2018 (13:45 IST)
பெண் பத்திரிக்கையாளரை கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுநர் மீது சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக, ஆளுநர் பன்வாரிலால் நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அது முடிந்ததும் ஒரு பெண் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவருடைய கன்னத்தை ஆளுநர் தட்டினார்.
 
கவர்னரின் இந்த செயலுக்கு அந்த பெண் பத்திரிகையாளர் தனது டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்தார். அதுமட்டுமின்றி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் ஒருசில கட்சி தலைவர்கள் கவர்னரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்றும் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.
 
இதனையடுத்து, பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் தட்டியது குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்தார். மேலும், அவர் அந்த பெண் பத்திரிக்கையாளரை தனது பேத்திபோல் நினைத்து கன்னத்தில் தட்டியதாகவும், அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறினார்.
 
இந்நிலையில், சட்டக்கல்லூரியில் படிக்கும் நந்தினி என்ற மாணவி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவில் சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments