Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழநி கோயில் நுழைவு விவகாரம்: மேல்முறையீடு செய்கிறதா தமிழக அரசு?

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (08:56 IST)
பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தளங்களிலும் அனைவரும் சென்று அமைதியாக வழிபட்டு வரும் நிலையில் இந்த தீர்ப்பு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 
 
 மேலும் இந்த தீர்ப்பு 1947 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கோயில் நுழைவு சட்டவிதிக்கு எதிராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மார்கிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு.. ஒரு கிராம் ₹10,000ஐ நெருங்கியதால் பரபரப்பு..!

ஆசியாவின் Big 3! மோடி, ஜின்பிங், புதின் சந்திப்பு! வயிற்றெரிச்சலில் ட்ரம்ப்!

காதலி செல்போன் பிசி.. கோபத்தில் காதலி கிராமத்தின் மின்சாரத்தை துண்டித்த காதலன்..!

எல்லை மீறிய கள்ளக்காதல்! 26 வயதான 3வது மனைவியை எரித்துக் கொண்ட 52 வயது கணவன்!

இன்று 2வது நாளாக உயரும் பங்குச்சந்தை.. ஆனால் ஒரு சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments