Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்னர் அலுவலகமா? அரசியல் கட்சி அலுவலகமா? கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (12:57 IST)
நேற்று தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அவர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவர்னருடன் அரசியல் பேசியதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து கவர்னர் அலுவலகம் என்ன அரசியல் அலுவலகமா அரசியல் பேச? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரஜினிக்கும் கவர்னருக்கும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது 
 
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் கூறியிருப்பதாவது: 
 
அரசியல் அலுவலகமா? கவர்னர் மாளிகை? இனியும் பொறுப்போமா? தமிழ்நாடு கவர்னரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக கவர்னரை சந்திப்பது ஏற்புடையதே. ஆனால் கவர்னர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது. 
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக கவர்னர் மாளிகை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது. இது தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது. தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்?! 
 
கவர்னர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் கவர்னருக்கு எதனால் வந்தது. அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து 'தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியாது' எனவும் திரு ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது. 
 
கவர்னர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், கவர்னர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக கவர்னர் மாளிகை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments