Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜீவ்காந்தி தான் அடுத்த பிரதமர்! டங் ஸ்லிப் ஆன கம்யூனிஸ்ட் வேட்பாளர்!

Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (08:56 IST)
எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் டங் ஸ்லிப் ஆகி உளறி வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவர் இந்தியாவின் அடுத்த பிரதமர் ராஜீவ் காந்திதான் என்று கூறியுள்ளார். 
 
திமுக கூட்டணியில் நாகை தொகுதியை பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அந்த தொகுதிக்கு எம்.செல்வராசு என்பவரை வேட்பாளராக அறிவித்தது. செல்வராசு கடந்த சில நாட்களாக தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 
 
இந்த நிலையில் நாகை அருகேயுள்ள கிழக்கு மேலகொருக்கை என்ற பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த செல்வராசு, தேர்தலுக்கு பின் மத்தியில் ராஜீவ்காந்தி பிரதமர் ஆவார் என்றும், மாநிலத்தில் ஸ்டாலின் முதல்வராவார் என்றும் பேசினார். பின்னர் அருகில் இருந்தவர்கள் தவறை சுட்டிக்காட்டியவுடன் ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கு, தனக்கு வாக்களியுங்கள் என்றார். வேட்பாளரின் டங் ஸ்லிப்பால் பொதுமக்கள் மத்தியில் சிரிப்பலை ஏற்பட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அடுத்த கட்டுரையில்
Show comments