சிலிண்டர் விலை குறைப்பு: இருப்பினும் சோகத்தில் இல்லத்தரசிகள்!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (07:28 IST)
ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஆகஸ்டு 1ஆம் தேதி இன்று சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை குறைக்க பட்டதாகவும் ஆனால் அதே நேரத்தில் வீட்டு உபயோகத்திற்காக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூபாய் 36.50 குறைந்து ரூ.2,141 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் மாற்றம் இன்றி ரூ.1168.00 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது 
வணிகப்பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டாலும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை குறைக்கப்படாததால் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் இருந்தால்தான் முஸ்லிம்கள் இருக்க முடியும்: முதல்வர் பேச்சுக்கு விஹெச்பி. கடும் எதிர்ப்பு

இன்று இரவு வரை 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?

முஸ்லிம் 2ஆம் திருமண பதிவுக்கு முதல் மனைவி சம்மதம் அவசியம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

9 மணி நேரம் விஜய் அழுதார்! தைரியம் இருந்தா என் தலைவன் மேல கை வைங்க! - ஆதவ் அர்ஜூனா சவால்!

போலி பிரச்சினைகளை உருவாக்குவது ராகுல் காந்தியின் வழக்கம்: பாஜக பதிலடி

அடுத்த கட்டுரையில்
Show comments